நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மோசமான பாதை நிலையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், அவசர அவசரமாக நோயாளிகளையும் கர்ப்பிணித் தாய்மாரையும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகளும் பிரசவங்களும் இடம்பெறும் துயர நிலையும் தொடர்கிறது.
எனவே, இந்த அபாயகரமான மலையகப் பாதையை உடனடியாகச் சீரமைத்துத் தருமாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் தோட்ட நிர்வாகத்திடம் பிரதேச மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










