நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம் குறித்த பிரேரணை நேற்று கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30வரை விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும்.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியிலுள்ள மலையக எம்.பிக்கள் கையொப்பமிடவில்லை.
வாக்கெடுப்பின்போது தமது கட்சி எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி, இதொகா என்பன இன்னும் தமது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.










