சர்வதேச விண்வெளித் திட்டத்திற்குத் தெரிவாகி இலங்கை மாணவி வரலாற்று சாதனை

சிறப்புமிக்க ‘சக்திசாட்’ (ShakthiSAT) சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Goonewardena) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இலங்கை உலக அரங்கில் இடம்பிடித்துள்ளது.

தேசிய STEM கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது சிறப்புப் பயிற்சி பெற்று வரும் 200 இலங்கை மாணவர்களிலிருந்து, மிகவும் கடினமான தேர்வு செயல்முறைக்கு பின்னரே செனீசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது இந்த சாதனை கல்வி மற்றும் இராஜதந்திரம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, விண்வெளி தொழில்நுட்பத்தில் இலங்கையின் இளம் அறிவியல் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தையும் வழங்குகிறது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ திட்டம் 2026 ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த உச்சிமாநாட்டின்போது, இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவருடன் உயர்மட்ட சந்திப்புகளில் செனீசா பங்கேற்கவுள்ளார். இது இத்திட்டத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த முயற்சியை ஒரு “மாற்றத்தை ஏற்படுத்தும் உலகளாவிய வாய்ப்பு” என வர்ணித்துள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும் சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதிலும் இதன் பங்கினை சுட்டிக்காட்டியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles