தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார்.
இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப் பதவிக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. FIFA தலைவராக அவரே நீடிப்பார்.
தான் கொண்டு வந்த திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பலத்த விமர்சனங்களை அடுத்து, புதன்கிழமை மொராக்கோவின் ரபாத் நகரில் உள்ள FIFA வின் ஆப்பிரிக்க அலுவலகத்திற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை இன்பான்டினோ அழைத்திருந்தார்.
கூட்டம் முடிந்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, உலக கால்பந்து நிர்வாக அமைப்பான FIFA அவருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
முன்னதாக, ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பான (UEFA) கடந்த வார இறுதியில் இன்பான்டினோ மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்ததுடன், ‘FIFA பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) திட்டத்தை ஒரு “ரகசியமான, வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் தகுதியற்ற ஒப்பந்தம்” என்றும் சாடியிருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பீபா தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்.










