நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரச நிவாரணம் தேவை: சோ. ஶ்ரீதரன் கோரிக்கை

சீரற்ற கால நிலையால் பாதிப்படைந்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

” நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் காலங்களில் தொழிலாளர்களின் விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன. இந்நிலைமை காரணமாக விவசாய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்குபொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இவை தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சோ. ஶ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles