இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உணவகத் துறை – 4,000 பேர்
நண்பகல் 12 மணி முதல் 4,000 பேருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள்:
25 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண்களாக இருக்க வேண்டும்.
உணவக சமையலறையில் குறைந்தது ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் நன்கு தொடர்புகொள்ளும் திறன் இருக்க வேண்டும்.
கனமான பொருட்களை தூக்குதல், நீண்ட நேரம் நின்று பணிபுரிதல் மற்றும் சமையலறைப் பாத்திரங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
உணவு அல்லது சுத்திகரிப்புப் பொருட்களால் Allergy ஏற்படாதவராக இருக்க வேண்டும்.
கட்டிட புனரமைப்புத் துறை – 12,000 பேர்
பிற்பகல் 2 மணி முதல் 12,000 பேருக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
நான்கு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன:
Putty மற்றும் Gypsum வேலை
Sunk Box மற்றும் Block Stone கட்டுமானம்
Plastering
Ceramic Tiling
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழில்முறை தகுதி மற்றும் அனுபவம் இருப்பதுடன், குறைந்தது 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும். அடிப்படை ஆங்கில அறிவும் அவசியம்.
முக்கிய நிபந்தனை
இரு துறைகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக்கூடாது. மேலும் அவர்களின் பெற்றோர், கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது இஸ்ரேலில் பணிபுரிபவர்களாக இருக்கக்கூடாது.
கட்டட புனரமைப்புத் துறை வேலைகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இறுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
எனினும், இஸ்ரேலின் வேறு தொழில் துறைகளுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்கு கட்டிடத் தொழில் பிரிவுகளில் தேவையான தகுதிகளை கொண்டிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் தொழில்முறை திறன்கள் தகுதிபெற்ற இஸ்ரேலிய பிரதிநிதிகளால் மதிப்பீடு செய்யப்படும் என SLBFE தெரிவித்துள்ளது.
எனவே தங்களுக்கு அனுபவமும் திறனும் உள்ள வேலைப் பிரிவுகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை SLBFE அதிகாரப்பூர்வ இணையதளம் – slbfe.lk ஊடாக சமர்ப்பிக்கலாம்.










