இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரும், 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றிய மஹில் சேனாரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மீன் விற்பனை நிலையங்களை அமைத்து அவற்றை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளில் உரிய கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.










