மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!

“மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது .” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா. பிரதானியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியை இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பான மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு ,

” கொடும் போரில் ஈழத்தமிழரை, கை விட்டு, அந்த போர் “சாட்சியம் இல்லாத போர்” ஆகி விட ஐநா காரணமாக அமைந்தது.

அதேபோல், இன்று மலையக தமிழரையும் ஐநா கைவிட்டு, விட கூடாது. புதிய “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

இதற்கு ஐநா துணை போய் விட கூடாது, என்று, ஐநா செயலாளர் நாயகத்தின் நேரடி பிரதிநிதியும், ஐநா அமைப்பின் பிரதான இலங்கை அதிகாரியுமான, இலங்கையில் உள்ள ஐநா வதிவிட இணைப்பாளர், மார்க் அந்ரேயை சற்று முன் சந்தித்து, நீண்ட விளக்கம் அளித்து கூறினேன்.

என்னுடன், ஜமமு உப தலைவர், கூட்டணி அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டார்.

நமது இந்த காரியம் எத்தனை பேருக்கு புரியுமோ, என எனக்கு தெரியாது. ஆனால் வரலாறு பதிவு செய்யும்”- என்றுள்ளது.

Related Articles

Latest Articles