நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதால் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்மொழிவு என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நான் எனது 55ஆவது வயதில் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றபோது, அமெரிக்க இராணுவத் தளபதியின் வயது 70 ஆக இருந்தது. அவர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் சுமார் 3 மில்லியன் படைகளைச் சிறப்பாக வழிநடத்தினார்.
எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதால் நாட்டிற்கு எவ்வித இழப்போ அல்லது பாதிப்போ ஏற்படாது. இந்த வயதெல்லை நீடிப்பு குறித்து சிலருக்கு அச்சம் இருக்கலாம்; அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகும். ஆனால், பொதுவான நோக்கில் இது ஒரு சிறந்த முன்மொழிவு, அதனை நாங்கள் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.










