இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? 3ஆவது இடத்தில் விஜய்!

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, பல தசாப்தங்களாக தேசிய அரசியலில் களமிறங்கிச் செயல்படும் மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் இந்த இடத்தை எட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து 9.2 சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார். இதன் மூலம் மம்தா பானர்ஜி (2%), அகிலேஷ் யாதவ் (1.7%), அர்விந்த் கேஜரிவால் (1.2%) உள்ளிட்ட முக்கியத் தேசியத் தலைவர்களை அவர் முந்தியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கச் சிறந்த தலைவர் யார் என்ற வினாவிற்கும் 12.2 சதவீத ஆதரவுடன் ராகுல் காந்திக்கு (29%) அடுத்தபடியாக விஜய் இரண்டாவது இடத்தைப் பெற்று, மம்தா பானர்ஜி (8.5%), கேஜ்ரிவால் (7.5%), அகிலேஷ் யாதவ் (6.9%) ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 25,184 நபர்களிடம் நேரடியாகவும், கடந்த ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட 91,795 பேட்டிகளின் அடிப்படையிலும் சி வோட்டர் நிறுவனம் இந்த ஆய்வு முடிவுகளைத் தயாரித்துள்ளது.

தமிழக வெற்றித் கழகம் 2026-ல் ஆட்சியைப் பிடித்தது முதலே 2029 மக்களவைத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தது.சமீபத்தில் தமிழக சட்டமன்றத்திலும் தவெக அமைச்சர்களான சரத்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விஜய்யின் தேசிய அரசியல் வருகை குறித்தும் தென்னகத்திலிருந்து ஒரு பிரதமர் உருவாவது குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் இந்த ஆய்வின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளன.

வரவிருக்கும் 2029 பொதுத்தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் அவகாசம் உள்ள நிலையில், தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும் விஜய்க்கான ஆதரவு அலை உருவாகத் தொடங்கியிருப்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles