சாய்ந்தமருது பகுதியில் நாய் இறைச்சி விற்பனையா?

சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles