நாட்டில் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 17) மழை பெய்யக்கூடும் என்றும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதானிப்பியல் திணைக்களம் கணித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
அத்துடன், வடமேல் மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே, பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
