மட்டக்குளியில் மூவரின் உயிரை பலியெடுத்த – கொடூர விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி, விபத்து நேரிட்ட தருணத்தில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஆவார். அவர் காரைச் செலுத்தியபோது கஞ்சா போதையில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 64 வயதுடைய கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
வத்தளை திசையிலிருந்து அதிவேகமாக வந்த கார் , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் இவ்விபத்து நேரிட்டதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.










