வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின் ஓயாத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர், குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் உள்ள மரமொன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து தாக்கியதிலேயே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










