“ வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் நிச்சயம் பங்கேற்போம்.
நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தத்தை உரிய வகையில் பிரயோகிக்க வேண்டும்.” – எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.










