இலங்கையில் இருந்து துபாயில் போதைப்பொருள் விநியோகம்: கம்பளை இளைஞன் கைது

இலங்கையில் இருந்தபடி, துபாயில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தார் என சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர்.

துபாயில் 04 வருடங்கள் பணிபுரிந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், அங்கு தங்கியிருந்த காலத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘கான் பாபு’ என்ற நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

கம்பளை மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான குறித்த இளைஞர் இலங்கை வந்த பின்னர், துபாயில் பணிபுரியும் இளைஞர்களுக்கு போதைப்பெருள் விற்பனை செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இளைஞர்களை தொடர்புகொள்ளும் இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த கான் பாபுவின் உதவியுடன் துபாயின் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களின் ‘லொகேஷன்’ முகவரிகளை அனுப்பி இந்த வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் கம்பளை – மரியவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையில், கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தாரக குமாரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் சோதனையிடப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 20 கிராம் 40 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், 04 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, இலங்கையிலிருந்து துபாயில் உள்ள இளைஞர்களுக்கு தொலைபேசி ஊடாக ‘லொகேஷன்’ அனுப்பி போதைப்பொருள் வியாபாரம் நடத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து துபாய் நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்த நபர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும் எனக் கூறப்படுகின்றது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணைகளில், இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கும் போதைப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் இவர் ஈடபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

துபாயில் உள்ள மீகமுவ லொக்கு அய்யா என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பு ஊடான தொடர்பிலேயே இவர் கெக்கிராவ பகுதியில் இருந்து போதைப்பொருளை பெற்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருட்களை குறிப்பிட்ட இடங்களில் மறைத்து வைத்துச் செல்லும் ‘லொகேஷன்’ முறையிலேயே இந்த வியாபாரம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.யோகா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles