சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
42 குற்றச்சாட்டுகளை அதில் உள்ளடக்குவதற்கும், அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது அதனை கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக இதற்கு முன்னரே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டிலுந்தாலும், அம்முயற்சி கைகூடவில்லை.
இந்நிலையிலேயே அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்குரிய பேச்சுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.










