இலங்கை குடும்பம் சவூதி தாய்க்கு மன்னிப்பு வழங்கியது…. சவூதி அரசாங்கம் இலங்கை மகனுக்கு மன்னிப்பு வழங்குமா……?

இலங்கை குடும்பம் சவூதி தாய்க்கு மன்னிப்பு வழங்கியது….
சவூதி அரசாங்கம் இலங்கை மகனுக்கு மன்னிப்பு வழங்குமா……?

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரின் முகநூல் பதிவு…..

அனோஜனின் தண்டனை குறைக்கப்பட அல்லது அவருக்கு பொது மன்னிப்பு கிடைக்க சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற ஒரு சம்பவத்தை தேடி அறிந்து இங்கு ஆதாரங்களுடன் பதிவிடுகிறேன். அனோஜனின் விவகாரத்தில் இதயசுத்தியுடன் செயற்படும் அனைவரும் இச்சம்பவத்தை மனிதநேயத்துடன் மாத்திரம் பகிரும்படி வேண்டுகிறேன்.

சவூதி அரேபியாவில் தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் விவகாரத்தில் நான் பதிவுகள் எதையும் இடவில்லை. ஆனால் அமைதியாக பலருடன் உரையாடல்களை மேற்கொண்டேன்.

அதில் இலங்கை செங்கொடிச் சங்கத்தின் தற்போதைய தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான எஸ்.சிவசுந்தரம் அவர்கள் தெரிவித்த விடயம் மிகவும் முக்கியமானது.

மஸ்கெலியா மவுசாகலை தோட்டப்பிரிவைச் சேர்ந்த கோவிந்தசாமி ராஜமணி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் 2004 ஆம் ஆண்டின் இறுதியில் தனது 35 ஆவது வயதில் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்றிருக்கின்றார்.
அவரது கணவர் சகாதேவன் தோட்டத் தொழிலாளியாவார். 2

005 ஆம் ஆண்டு ஒரு நாள் ராஜமணி பணியாற்றிய வீட்டின் எஜமானி இவருடன் ஏதோ ஒரு காரணத்துக்காக முரண்படுகின்றார். இறுதியில் அவர் ராஜமணியை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகின்றார். (13/12/2005 இடம் Tabrgel) ராஜமணியின் உடல் கழிவுகளின் மத்தியில் வீசப்பட்டு விடுகின்றது.

அவ்வீதி வழியே சென்ற ஒருவரால் உடனடியாக சவூதி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு உடல் மீட்கப்படுகின்றது. இவரை கொலை செய்தது யார் என்ற விசாரணை ஆரம்பமாகின்றது. பொலிஸாருக்கு ராஜமணி பணியாற்றிய வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம் இருந்தாலும் ஆதாரங்கள் இல்லை.

ராஜமணி கொலை செய்யப்பட்டமை அவரது குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டாலும் விசாரணைகள் இடம்பெற்று வந்ததால் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில் சுமார் ஒரு வருட காலத்துக்கு மேல் இடம்பெற்ற விசாரணைகளின் போது ராஜமணியை கொலை செய்த வீட்டு உரிமையாளரின் சிறு வயது மகள் தனது தாயைப் பற்றி ஒரு வாக்குமூலம் வழங்குகின்றார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில் குற்றம் நிரூபணமாகின்றது. ராஜமணி பணியாற்றிய வீட்டு எஜமானிக்கு மரண தண்டனை தீர்ப்பாகின்றது.

இந்நிலையில் தனது மனைவியின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதில் அவரது கணவர் சகாதேவன் கடும் சவால்களை சந்தித்துள்ளார். இது தொடர்பில் சகல ஆவணங்களையும் தயாரித்து இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் ஊடாக சவூதி அரேபியாவுக்கு அவற்றை அனுப்புவதில் சிவசுந்தரம் அவர்கள் அவரது கணவருக்கு உதவியுள்ளார். இவர் சமாதான நீதவானாக இருந்ததால் சத்திய கடதாசிகளாக பல ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. இதே வேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட ராஜமணியை கொலை செய்த வீட்டு எஜமானியின் கணவர் ஊடாக சகாதேவனுக்கு ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு மன்னிப்பு வழங்குவதாக கூறினால் அவரது தண்டனை குறையும் என்றும் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவரை மன்னிக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.

தாயை இழந்து நிற்கும் தனது பிள்ளைகள்…… துணையை இழந்து நிற்கும் சகாதேவன் என்ன செய்வார். அவர் உடனே ஒரு முடிவெடுத்தார். தனது மனைவியை கொலை செய்த ஒரு தாய்க்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் தனது பிள்ளைகளுக்கு தாய் கிடைத்து விடுவாரா என அவர் மன்னிப்பு வழங்குவதற்கு முடிவெடுத்தார். அவரது முழு சம்மதத்துடனான அக்கடிதத்தை சிவசுந்தரம் அவர்களே தயாரித்து அவரது கையொப்பத்துடன் சவூதி தூதரகம் ஊடாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் மரண தண்டனையிலிருந்து குறித்த சவூதி பெண்மணி காப்பாற்றப்பட்டார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. சகாதேவன் குடும்பத்துக்கு ஒரு தொகை நட்டஈட்டை செலுத்தும்படி நீதிமன்றம் (Al-Jauf) உத்தரவிடுகின்றது.

இதையடுத்து 2007 ஆம் ஆண்டு ராஜமணியின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அவரது இடமான மவுசாகலை தோட்டத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அந்நேரத்தில் எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை.

இவ்விவகாரத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட சமூக செயற்பாட்டாளர் சிவசுந்தரம் அவர்கள் இச்சம்பவம் ஏதாவதொரு வழியில் அனோஜனை காப்பாற்ற வழிவகுக்குமா என ஆராய்ந்து பார்க்கும்படி கூறினார். கடந்த வாரம் மலையகத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் எனக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மவுசாகலைக்கு பயணிப்பது சவாலாக இருந்தது. பின்பு அப்பிரதேசத்தில் வதியும் மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான ஆனந்தனை தொடர்பு கொண்டு அவ்விடத்துக்குச் சென்று ஆவணங்களைப் பெற்றுத்தரும்படி உதவி கோரினேன். அவரும் இயன்றவரை சில ஆவணங்களைப் பெற்றுத்தந்தார்.

இப்போது விடயத்துக்கு வருவோம். அனோஜனின் தண்டனையை குறைப்பதற்கு அல்லது பொது மன்னிப்பு வழங்குவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அரசியல் பிரமுகர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். எனவே நான் இங்கு குறிப்பிட்ட சம்பவத்தையும் ஒரு சான்றாக சவூதி தூதரகத்தின் ஊடாக சவூதி அரசாங்கத்துக்கு கொண்டு செல்லலாம். அவ்வாறு முயற்சிப்பவர்களுக்கு நான் சகல ஆவணங்களையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன்.
இவ்விடயம் பாராளுமன்றத்தில் பேசப்பட்டால் இராஜதந்திர மட்டத்திலும் பேசுபொருளாகும்.

👉முக்கிய குறிப்பு:👈

இங்கு எவ்விடத்திலும் நான் மலையகம் என்ற சொல்லை உபயோகப்படுத்தவில்லை.எனது பதிவை நகல் எடுப்பவர்களும் அப்படி செய்யாதீர்கள். அனோஜன் என்ற இலங்கையரே சவூதியில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். அதே வேளை சவூதி வாழ் தாய் ஒருவருக்கு இலங்கையர் ஒருவரே மன்னிப்பு வழங்கியுள்ளார். எனவே நாம் அனைவரும் இலங்கையர்களாகவே இவ்விடயத்தில் செயற்படுவோம்.
முயற்சி செய்வோம்…..

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles