என்பிபி அரசுடன் எங்களுக்கு டீல் இல்லை: சஜித் அணி எதற்கும் அஞ்சாது

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றிவருகின்றோம்.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் இன்று வந்துவிட்டனர். பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்துவருகின்றது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் உட்பட அனைத்து விடயங்களிலும் பொறுப்புடன் செயல்பட்டுள்ளோம்.

இந்த அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை ரீதியில் சவால் கொடுப்பது கடினம்.

இணைந்து பயணிக்ககூடிய விடயங்களில் அனைத்து எதிரணிகளுடனும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றிவருகின்றோம். அதற்காக தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை. அரசாங்கத்துடன் எங்களுக்கு டீலும் இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமது பொறுப்பை சரிவர நிறைவேற்றுவோம்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணையும்.” – என்றார் ஹர்ஷன ராஜகருண.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles