இலங்கையை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் அணி!

சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 131 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களையும் விளாசினர்.

326 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,48.3 ஓவர்களில் 331 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு Fakhar Zaman
127 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.

இந்த வெற்றியின்மூலம் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்ற ஒருநாள் முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்டு 325 ஓட்டங்களைக் குவித்த போதிலும், பந்துவீச்சில் எதிரணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles