நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக தங்கவேலு சண்முகராஜா இன்று (16) உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் நுவரெலியா புனித பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் பிரதி அதிபராகவும், நுவரெலியா வெஸ்ட்வாட்வேஹா தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபராகக் கடமையேற்ற தங்கவேலு சண்முகராஜாவைப் பாடசாலையின் முன்னாள் அதிபர் பெனடிக் எந்தனி, உப அதிபர் சிவபிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொன்னாடை போர்த்தி மலர்மாலை சூட்டி அன்புடன் வரவேற்றனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்










