உதேனி சமன் குமார தொகுத்த ‘றோகண விஜேவீரவின் வாக்குமூலம்’ (Rohana Wijeweera’s Statement) என்ற நூல், கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு 7-இல் உள்ள மகாவலி நிலையத்தில் வரும் 25ஆம்திகதி பிற்பகல் 3 மணிக்கு இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
1971ஆம் ஆண்டு ஜூலை மாதம், யாழ்ப்பாணச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஜேவிபி நிறுவுநரான றோகண விஜேவீரவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது பெறப்பட்ட வாக்குமூலமே இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
55 ஆண்டுகளுக்கு முன்னர், 27 வயதான றோகண விஜேவீர, சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் முன்வைத்த கருத்துகளைக் கொண்ட இந்த வாக்குமூலம், இந்த நூல் மூலம் முதன்முறையாகப் பொதுவெளியில் வெளியிடப்படுகிறது.
