சவூதியில் ஆரம்பமாகும் இலங்கை கிரிக்கெட் திருவிழா!

‘ Sri Lankan Premier League KSA 2026’ – மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Ella Strikers அணியும் களம் காண்கிறது

சவூதி அரேபியாவில் தொழில் புரியும் இலங்கையர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், Kandy XI கிரிக்கெட் கிளப் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ‘Sri Lankan Premier League KSA 2026’ கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 மற்றும் 11ஆம் திகதிகளில் தம்மாம் ரக்கா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்படும் இந்தத் தொடரில் ஆறு அணிகள் கிண்ணத்திற்காகப் போட்டியிடவுள்ள நிலையில், போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இலங்கையின் மலையகப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Ella Strikers அணி இத்தொடரில் களமிறங்கவுள்ளமை மலையக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சவூி அரேபியாவில் வாழும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அணிகளுக்கிடையிலான விளையாட்டு ஒற்றுமை மற்றும் நட்புறவை வலுப்படுத்துவதற்கும் இத்தொடர் சிறந்த களமாக அமையும்.

முதல் முறையாக நடைபெறவுள்ள ‘Sri Lankan Premier League KSA 2026’ தொடரில் வெற்றிக்காக களமிறங்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுவதுடன், Ella Strikers அணி மலையகத்தின் பெயரை உயர்த்தி வெற்றிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles