🛑 முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.
🛑 பிறப்பு – 1968.11.24.
🛑 பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.
🛑 ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.
🛑 உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.
குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.
🛑 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.
அரசியல் வாழ்க்கை……
🛑 1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
🛑 1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் செயற்பாட்டு அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார்.
🛑 1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார்.
2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
🛑 2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையும் தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.
🛑 2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
🛑 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
🛑 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைமைப்பொறுப்பு கையளிக்கப்பட்டது.
அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.
🛑 2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சபையில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் பதவி வகித்தார்.
🛑 2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.
🛑 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்.
ஆர்.சனத்
