‘மலையகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரச நிவாரணம்’ – திகா கோரிக்கை

மலையகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசு உடனடியாக உரிய  நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் இன்ஜெஸ்ட்ரி, போடைஸ், சென்கூம்ஸ் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1500 தொழிலாளர் குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளனர்.
இவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு முன் வர வேண்டும்.
அத்துடன்  தனிமைப்படுத்தப்பட்ட தோட்டங்களுக்குரிய தோட்ட கம்பெனிகளும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு முன் வர வேண்டும் .
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles