காலியில் 281, குருணாகலயில் 218, நுவரெலியாவில் 71 பேருக்கும் நேற்று கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 71 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தில் 38 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 79 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 20 பேருக்கும், மொனறாகலை மாவட்டத்தில் 11 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் 73 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 218 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 99 பேரும், காலி மாவட்டத்தில் 281 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 79 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles