வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (23) நடைபெறும் எனவும், இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரா. சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று நாடாளுமன்றம் வராததால் நாடாளுமன்றக்குழு கூடவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பிரிதொரு நாளிலேயே தீர்மானம் எடுக்கப்படும்.










