யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் குருநகர் மேற்கு , ரெக்லமேசன் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மஞ்சதொடுவாய் வடக்கு , மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவில் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், குருணாகல் மாவட்டத்தில், குருணாகல் பொலிஸ் பிரிவில் இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவில் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவில் கனுக்கெட்டிய கிராமமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.










