தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிருகக்காட்சி சாலையின் நிர்வாகத்தினர் உரிய முறையில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்காமையே அங்குள்ள மிருகங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு காரணம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் எஸ். சுகிர்தன் தெரிவித்தார்.
குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்த ‘தோர்’ என்ற சிங்கத்துக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அது தற்போது குணமடைந்துள்ளது என வனஜீவராசிகள் அமைச்சர் தெரிவித்தார்.
