45 சாராய போத்தல்களுடன் மடுல்சீமை பகுதியில் ஒருவர் கைது!

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெரலப்பத்தனை பெருந்தோட்டப் பகுதியில் 180 மில்லி லீட்டர் கொண்ட 45 சாராய போத்தல்களுடன் 41 வயதுடைய நபரொருவர் மடுல்சீமை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இன்று பகல் மேற்படி தோட்டப்பகுதிக்கு விரைந்த, பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய போத்தல்களை மீட்டனர்.

இன்றைய போயா தினத்தில் விற்பனை செய்வதற்கே இச் சாராய போத்தல்கள் கொண்டு வரப்பட்டிருந்தனவென்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles