அதிக விலைக்கு அரிசி விற்றால் இனி ஆப்பு – ஒரு லட்சம் ரூபா அபராதம்!

நிரணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டால்இனி  ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நிர்ணய விலையைவிடவும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாவே அபராதம் விதிக்கப்படுகின்றது.  இப்பணத்தை செலுத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் இலகுவில் தப்பிவிடுகின்றனர். எனவேதான் 2,500  ரூபாவை ஒரு லட்சமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர்  கூறினார்.

Related Articles

Latest Articles