தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 50,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 43,000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் 7,000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது கூறினார்.










