‘பொருத்தமான கல்வி முறைமையை முன்வைக்க வேண்டும்’

கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

பெருநகரப் பல்கலைக்கழக திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் பெரும்பாலானோர், அரச தொழிலை எதிர்பார்ப்பதாகவும் தொழில் வழங்குவதை விட, தொழிலை உருவாக்கும் பொருளாதார பின்புலத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டையே அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்திற்கு நேரடியாக தொடர்புபடும் அல்லது சுயதொழிலில் ஈடுபடக்கூடிய அறிவுள்ள நபரை பட்டப்படிப்பின் பின் உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

100 வீதம் அரச பல்கலைக்கழகங்களை நடத்த முடியாது என கூறியுள்ள ஜனாதிபதி, வர்த்தக நோக்குடன் மாத்திரம் செயற்படுத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு தாம் எதிர்ப்பை வௌியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்களில் ஈட்டும் வருமானத்தை கல்வி நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பெருநகர பல்கலைக்கழகத்திற்கான முதலாவது திட்டத்தை கேகாலை – பின்னவல பகுதியில் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles