அழுது புலம்பும் ஆளுங்கட்சி எம்.பிக்கள்! ஆறுதல் படுத்த புதிய பதவி!!

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகின்றது. சுயாதீனமாக இயங்க முடியவில்லை எனவும், உரியவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை எனவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர் எனவும் அறியமுடிகின்றது.

இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் தாம் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட எஸ்.பி. திஸாநாயக்க,

“ ஆளுங்கட்சியில் மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்தப்படியாக நாடாளுமன்றத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். ஆனாலும் சபையில் பின்வரிசையில் அமர்ந்துள்ளோம். அதிருப்தியால்தான் இவ்வாறு ஒதுங்கியுள்ளோம். கவலை இருந்தாலும் சரித்துக்கொண்டுதான் செயற்படுகின்றோம். நான் வகித்த அமைச்சு பதவிகள் எல்லாம் சாதனை படைத்தவை. விவசாய அமைச்சராக இருந்தேன். பராக்கிரம பாகு மன்னனுக்கு அடுத்தபடியாக விளைச்சல் கிடைத்தது. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது. எனவே, எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமை தவறாகும். இருந்தாலும் அமைச்சு பதவியை கேட்டுபெறப்போவதில்லை.” – என்றார்.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன,

“ ஆணமடுவ என்பது இலங்கையிலுள்ள இரண்டாவது பெரிய தொகுதியாகும். இங்கு கப்பம் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் முறையிட்டால் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. எனது கரங்கள் தூய்மையானவை. அரசியல் வெறுத்துவிட்டது. கவலையில்தான் இருக்கின்றேன்.” – என்றார்.

அதேவேளை, அதிருப்திநிலையில் உள்ள ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுகளை மேற்பார்வை செய்யும் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles