வெள்ளவத்தை பிரதேசத்தில் தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்த நேபாளப் பெண் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார்.
தொடர்மாடிக் குடியிருப்பில் இவர் சுருக்கிட்டுக் கொண்டுள்ளதாகவும் எனினும், இது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் நடனத் தாரகையாக வேலை செய்துவந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேபாளத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகள் இன்று நடத்தப்படுவதாகவும், இதன்பின்னரே இந்த மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸ மரண விசாரணை அதிகாரி இதுகுறித்த விசாரணைகளை நேற்று நடத்தியிருந்தார்.
இந்த நேபாள பெண் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளில் வேலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்










