சிறுமி ஹிசாலினியின் உடல் பலத்த பாதுகாப்புடன் பேராதனை எடுத்துச் செல்லப்படுகிறது

டி சந்ரு

சிறுமி ஹிசாலினியின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் இன்று (30/07) மதியம்  12 மணியளவில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்து தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த (15) ஆம் திகதி உயிரிழந்த டயகம மேற்கு பிரிவு தோட்ட சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் உடலம் (30) காலை 8.30 மணிக்கு தோன்றி எடுக்கப்பட்டு உடலம் மேலதிக உடல் கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் (29) அனுமதி வழங்கியது.

சிறுமி ஹிசாலினியின் பிரேத பரிசோதனை கொழும்பில் இடம்பெற்றதாகவும், முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி சடலம் பெற்றோர்களுக்கு கையளிக்கப்பட்டதாகவும் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மீண்டும் சட்ட வைத்தியர் ஒருவர் ஊடாக உடல் கூற்று பரிசோதணை செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி லுசாக்கா குமாரி ஜெயரத்ன முன்னிலையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட டயகம மேற்கு தோட்ட புதைக்குழிக்கு கடந்த நான்கு நாளாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டு மீண்டும் சிறுமியின் சடலத்தை தோண்டி பரிசோதனைக்கு அனுப்ப கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கமைவாக  சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சிரேஸ்ட சட்ட வைத்தியர் உள்ளிட்ட பொலிஸார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு ஒன்று வருகை தந்துள்ளது.இக்குழுவில் வருகை தந்திருந்த சிறுவர் உரிமை அதிகார சபை அதிகாரிகள் சிறுமியின் சடலத்தை (30) காலை தோண்டுவதற்கு அனுமதி கோரி (30) காலை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி விண்ணப்பத்தை பரீசிலனை செய்த நீதிபதி நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி லுசாக்கா குமாரி ஜெயரத்ன (30) தனது நேரடி பார்வையில் புதைக்குழி தோண்டப்பட்டு உடலத்தை மீட்க அனுமதியை வழங்கினார்.

இதற்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள வைத்தியர் ஒருவர் உள்ளடங்கிய அதிகாரிகள் மற்றும் கண்டியிலிருந்து வருகை தந்துள்ள இரண்டு வைத்திய அதிகாரிகள்,  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் நுவரெலியா ,டயகம பொலிஸார் உள்ளிட்டோர் முன்னிலையில் காலை 09 மணிக்கு ஆரம்பித்து நன்பகல் 12 மணியளவில்  டயகம தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் தோண்டி எடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்போடு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles