பூண்டுலோயா, ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மரமொன்று வேரோடு முறிந்து விழுந்ததில் வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது.
மலையகத்தில் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் இன்று முற்பகல் 9 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்













