” அரசாங்கத்துடன் இருப்பதாக இருந்தால் கூட்டு பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் தனித்துவமாக செயற்படுவதே சிறந்தது.” -என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” அரசியலில் சிலருக்கு திடீரென ‘அதிகாரம்’ என்ற நோய் ஏற்பட்டுவருகின்றது. அந்த நோய்க்கு மருந்து கிடையாது. இந்த அதிகார மோகத்தால் சிலர் சிறையில் உள்ளனர். மேலும் சிலர் அரசியலில் இருந்தே விடைபெற்றும் உள்ளனர்.
2005 இல் மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெற செய்வதற்கு மங்கள சமரவீர பாடுபட்டார். அதன்பின்னர் அவர் வெளியேறினார். அரசுக்கு எதுவும் நடக்கவில்லை. இந்த அரசை தனியாக எவரும் உருவாக்கவில்லை.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.










