தமிழர் தரப்புகளும், முஸ்லிம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அடையாள ரீதியாக நாம் இன்று சந்தித்தாலும் எதிர்வரும் காலங்களிலும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடப்படும். அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்தப்படும்.
தமிழ்தரப்புக்களும் முஸ்லிம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்பட சாத்தியப்பாடுகள் இருக்கின்றது. அனைத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது” என்றார்.










