‘மஹிந்த சிறந்த தலைவர்’ – சுதந்திரக்கட்சி புகழாரம்!

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த – அனுபவமுள்ள அரசியல் தலைவர். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5ஆவது தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த,

” நெருக்கடியான சூழ்நிலையில் எம்முடன் பயணித்த கட்சிகளை ஓரங்கட்டக்கூடாது. பங்காளிக்கட்சிகள் என்பவை கைப்பாவைகள் அல்ல. எனவே, கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய பிரதான பொறுப்பு தலைமைக்கட்சிக்கே இருக்கின்றது.” – என்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தயாசிறி,

” இந்நாட்டிலுள்ள சிறந்த தலைவர்தான் பிரதமர் மஹிந்த. அவர் வெளியிட்ட கருத்தால் மகிழ்ச்சியடைகின்றோம். அவருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டியது யாரின் பொறுப்பு என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.”- என்றார்.

Related Articles

Latest Articles