” தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடால், உடனடியாக வெளியேறுங்கள்.” – இவ்வாறு மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
கேகாலையில் நடைபெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு சவால் விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தவறிழைத்துவிட்டோம், அன்று சித்திரம் வரைந்த இளைஞர்கள், இன்று நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என இன்று சிலர் கவலை வெளியிடுகின்றனர். இவ்வளவு நாள் நித்திரையிலா இருந்தார்கள்?
வடக்கையும், தெற்கையும் விற்கும்போது பங்காளிகள் அரசுக்குள்தான் இருந்தார்கள். நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அமைச்சரவைப் பத்திரம் வரும்போது அமைச்சரவையிலும் இருந்தனர். எனவே, தற்போது நாடகமாடுகின்றனர்.
தன்மானம் இருப்பில் அரசிலிருந்து வெளியேறி, எம்முடன் இணைந்து போராடுமாறு சவால் விடுக்கின்றேன்.”- என்றார்.
