அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்பட மாட்டார் என குற்றப்புலானய்வு பிரிவு சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே சட்டமா அதிபர் இவ்வாறு அறிவித்துள்ளார்.










