பலத்த பாதுகாப்புடன் பட்ஜட் கூட்டத்தொடர் 12 இல் ஆரம்பம்!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் 12 ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூட இருப்பதோடு சனிக்கிழமைகளிலும் நாடாளுமன்றம் கூட உள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறும்.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக இம்முறை வரவு செலவுத்திட்ட விவாதம் சைகை மொழியிலும் இடம்பெற உள்ளது விசேட அம்சமாகும்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தில் விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதோடு ஏனைய தினங்களிலும் விசேட ஒழுங்குள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக 2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. 2 வருடங்களின் பின்னரே இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது

Related Articles

Latest Articles