ஜீவன் தொண்டமான் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுடன், மக்களுக்கான சில நிகழ்வுகள்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பிறந்த தினத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

அந்த வகையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 25 பாடசாலை மாணவர்களுக்கு அவர்களது கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக புலமைப்பரிசில் (காசோலை) மற்றும் புத்தகப்பை, பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக இயந்திரம் பழுதுபார்க்கும் இளைஞர்களுக்கு அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு நோர்வூட் சமுர்த்தி வங்கி ஏற்பாடு செய்யபட்ட சுயதொழில் மேற்கொள்ளவிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உபகரணங்களும் ,தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களான ஏ.பி சத்திவேல் ,கணபதி கணகராஜ் ,எ.பிலிப்குமார் பிரதேச சபை தலைவர்கள் ,உறுப்பினர்கள் இ.தொ.காவின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

  • ஊடகப் பிரிவு

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles