எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விசேட குழு!

வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (30) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் குழு நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் கடந்த சில தினங்களில் தொடர்ச்சியாக எாிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles