பசறை சுகாதார பிரிவில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 2 கொரோனா தொற்றாளர்களும் இன்றைய தினம் (02/12) மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 4 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுள் வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 2 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். 6 தொற்றாளர்களையும் தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்து வருவதாக பசறை சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார பரிசோதகர்களினால் தற்போது நாட்டில் கொரோனா சம்பந்தமான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா










