பிரியந்தவின் உடல் இன்று மாலை இலங்கை வந்தடையும்!

பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில்  கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.

அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186 என்ற விமானம், இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணியளவில்  கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles