2022 ஜனவரியில் ரணில் பிரதமர்? அரசு இன்று வழங்கிய பதில்!

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

2022 இல் பிரதமர் பதவியில் மாற்றம் வராது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஜனவரியில் பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும், பஸில் அல்லது ரணில் விக்கிரமசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி கேள்வி எழுப்பட்டது.

Related Articles

Latest Articles