டெல்டா – ஒமிக்ரோன் கலந்த ‘இரட்டைத் தொற்று’ ஆபத்து!

ஏற்கனவே பரவியுள்ள டெல்ரா திரிபும் தற்சமயம் தோன்றியுள்ள ஒமெக்ரோன் திரிபும் ஒரே சமயத்தில் ஒருவருக்குத் தொற்றக்கூடிய(“dual infection”) ஆபத்து உள்ளது. விரைவில் மிகக் குறுகிய காலத்தில் இந்த இரு திரிபுகளும் இணைந்து கொள்ளும் (coexist) ஏது நிலை காணப்படுகிறது.

‘மொடோனா’ தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை மருத்துவ நிபுணர் டாக்டர்போல் பேர்ட்டன் (Dr Paul Burton) லண்ட னில் இன்று அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் குழுவினருடனான(Science and Technology Committee) கூட்டத்தில் இவ் வாறு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

ஒமெக்ரோன் ஒர் உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என நினைக்கிறேன். மூன்று நாட்களில் அது இரட்டிப்பு வேகத்தைக் காட்டியிருக்கிறது.ஒருவர் உடலில் இரண்டு வைரஸ்களையும் காவ முடியும். அது உண்மையில் மிகமோசமானது. ஏனெனில் அவை இரண்டும் மரபணுக்களைப் பகிர்ந்து கொள்ளவும்(share genes) மரபணுக்களை உருவாக்குவதற்கும் அது வாய்ப்பளிக்கிறது.

இரட்டைத் தொற்றுக்கு (“dual infection”) இலக்காகுவது மோசமான உயிராபத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு திரிபுகளது இணைவு தனித்தனியே வேறு புதிய திரிபுகள் உருவாகுவதற்கு மிகவும் வாய்ப்பானதாகும். -இவ்வாறு அவர் அங்கு தெரிவித்தார்.

இரண்டு வைரஸ் திரிபுகள் ஒருவருக்கு ஒரேசமயத்தில் தொற்றுவது அரிதானது என்றே நம்பப்பட்டுவருகிறது. முன்னர் பெல்ஜியம் நாட்டில் 90 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸின் ‘அல்பா’ (Alpha) ‘பேற்றா’ (Beta) ஆகிய இரண்டு திரிபுகள் தொற்றிய நிலையில் உயிரிழந்தார். அவர் தடுப்பூசி எதனையும் பெற்றிருக்கவில்லை.

இதேவேளை, லண்டனில் நாளாந்தத் தொற்றுக்களில் 44 வீதமானவை ஒமெக்ரோன் திரிபினாலேயே ஏற்படுவ தாக இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு முகவரகத்தைச் சேர்ந்த(UK Health Security Agency) மருத்துவர் சுசன் ஹொப்கின்ஸ் (Dr Susan Hopkins) தெரி வித்தார்.

ஒமெக்ரோன் பரவத் தொடங்கிய பின்னர் மறு தொற்றுக்கு இலக்கா வோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடெல்ராவுடன் ஒப்பிட்டால் ஒமெக்ரோன்மூன்று முதல் எட்டு மடங்கு வரை மறு தொற்றை (reinfection) ஏற்படுத்துகிறது.

அதாவது ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்கள் பலரை மீண்டும்ஒமெக்ரோன் தாக்கிவருகிறது – என்றுஅவர் மேலும் கூறியுள்ளார்.

இதுவரை உருவாகிய கொரோனா வைரஸின் திரிபுகள் எதுவுமே ஒமெக் ரோன் போன்று மிக வேகமாகப் பரவிய தில்லை என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) இன்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக் கிறார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles