ரணிலை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள்! ஜே.வி.பி. வெளியிடும் தகவல்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன – என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.

” ராஜபக்சக்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவை சுற்றிவருகின்றனர். இவர்கள் ஒன்றிணையக்கூடும். ரணிலை பிரதராக்கபோகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் செல்ல வேண்டும் என்பதுதான் ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு. அங்கு செல்வதற்கான சூழ்நிலையையே அரசும் உருவாக்கிவருகின்றது. எனவே, இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் இவர்கள் மண்டியிடுவார்கள்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை ரணில் பிரதமராக்கும் திட்டம் இல்லை என இதற்கு முன்னர் ஆளுந்தரப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles